தனியுரிமை கொள்கை

நாங்கள் உங்கள் தரவை எப்படிக் கையாளுகிறோம், இந்தியச் சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகள்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: ஜூன் 2026

உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதில் எங்களது கடப்பாடு

("நாங்கள்", "எங்களிடம்", "எங்களுடைய" ஆகிய) லிவிங் வேர்ட் டிரஸ்ட் உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளது. இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, எங்கள் இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தும்போது நாங்கள் என்ன தகவலைச் சேகரிக்கிறோம், அதை ஏன் சேகரிக்கிறோம், அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், உங்கள் சொந்தத் தரவின் மீது உங்களுக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பதை எளிய மொழியில் விளக்குகிறது.

இந்தக் கொள்கையானது, இந்தியாவின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP சட்டம்) மற்றும் 2025ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தDPDP விதிகள், 2025 ஆகியவற்றிற்கு இணங்க எழுதப்பட்டுள்ளது.

தெளிவான மொழிநடையில் தரவு குறித்த சுருக்கம்: உங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, நகரம் ஆகிய தகவல்களை மட்டுமே சேகரிக்கிறோம். நீங்கள் கோரிய மின்புத்தகத்தை உங்களுக்கு அனுப்புவதற்கும், அவ்வப்போது இந்தப் புத்தகத் தொகுப்பில் புதிய புத்தகங்கள் வெளியிடப்படும்போது அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்கும் மட்டுமே இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். உங்கள் தகவல்களை நாங்கள் விற்கமாட்டோம்; விளம்பரதாரர்களுடன் பகிரமாட்டோம்; அல்லது எந்தவொரு வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தமாட்டோம்.

நாங்கள் யார்

DPDP சட்டத்தின் நோக்கங்களுக்காக, லிவிங் வேர்ட் டிரஸ்ட், தரவுப் பொறுப்பாளர் ஆகும் — அதாவது உங்கள் தனிப்பட்ட தரவு எப்படி, ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்.

  • நிறுவனம்: லிவிங் வேரட் டிரஸ்ட்
  • குறிக்கோள்: தனிப்பட்ட வாசிப்பு மற்றும் ஆய்வுக்காகக் கிறிஸ்தவ இலக்கியத்தை இலவசமாக விநியோகித்தல்
  • தரவு சம்பந்தமான விஷயங்களுக்கான தொடர்பு privacy@living-word.org

தாங்கள் சேகரிக்கிற தரவு என்ன

மின்புத்தகத்தைப் பதிவிறக்க நீங்கள் பதிவுசெய்யும்போது, நாங்கள் கீழ்க்கண்டவற்றை சேகரிக்கிறோம்:

  • உங்கள் பதிவை உரிய முறையில் மேற்கொள்ளுவதற்காகமுதல் மற்றும் கடைசி பெயர்
  • உங்கள் கோரிக்கை தொடர்பாகத் தேவைப்பட்டால் உங்களைத் தொடர்புகொள்வதற்காகதொலைப்பேசி எண்
  • நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பையும் உறுதிப்படுத்தல் செய்தியையும் அனுப்புவதற்காகமின்னஞ்சல் முகவரி
  • எங்கள் புத்தகங்களின் வாசகர்களுடைய இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காகநகரம் (உங்கள் முழு முகவரியை நாங்கள் சேகரிப்பதில்லை)

நீங்கள் தொடர்பு படிவத்தின் மூலம் ஒரு விசாரணையைச் சமர்ப்பிக்கும்போது, உங்கள் அனுப்பும் செய்தியையும் உங்கள் விசாரணையின் தலைப்பையும்நாங்கள் சேகரிக்கிறோம்.

நாங்கள் உணர்திறன்மிக்க தனிப்பட்ட தரவை (சாதி, மதம், உடல்நலத் தகவல்கள் அல்லது நிதி விவரங்கள் போன்றவற்றை)சேகரிப்பதில்லை. மேலும், குக்கீகள், கண்காணிப்பு பிக்சல்கள், அல்லது எந்தவிதமான பயனர் நடத்தைக் கண்காணிப்பு முறைகளையும் பயன்படுத்துவதில்லை.

நாங்கள் ஏன் அதைச் சேகரிக்கிறோம் — எங்கள் குறிக்கோள்

DPDP சட்டத்தின்கீழ், ஒரு குறிப்பிட்ட, தெளிவாகக் கூறப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே நாங்கள் உங்கள் தரவைச் செயலாக்க முடியும். பின்வரும் நோக்கங்களுக்காக மட்டுமே நாங்கள் உங்கள் தரவைச் சேகரிக்கிறோம்:

  • நீங்கள் கோரும் மின்புத்தகப் பதிவிறக்கக் கோரிக்கையைச் செயல்படுத்துவதற்காக, மேலும் கோரப்பட்டப் புத்தகங்களுக்கான அணுகல் உரிமையை வழங்குவதற்காக
  • மின்னஞ்சல் வாயிலாக உங்கள் பதிவிற்கான உறுதிப்படுத்தலை உங்களுக்கு அனுப்புவதற்காக
  • அந்தத் தொடரிலுள்ள கூடுதலான புத்தங்கள் எப்போது கிடைக்கும் என்பதையும், அதனோடு தொடர்புடைய சலுகைகளையும் உங்களுக்குத் தெரிவிப்பதற்காக
  • எங்களைத் தொடர்புகொள்வதற்கான படிவத்தின் மூலம் நீங்கள் எங்களுக்கு அனுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக
  • வாடிக்கையாளருக்கு உதவி வழங்குவதற்காக

உங்கள் தரவை எங்கள் புத்தகத் தொடருடன் தொடர்பில்லாத சந்தைப்படுத்தலுக்காகவோ, இலக்குவைக்கப்பட்ட விளம்பரங்களுக்காகவோ, தனிநபர் சுயவிவர உருவாக்கத்திற்காகவோ அல்லது வேறு எந்த வணிக நோக்கத்திற்காகவோஒருபோதும்பயன்படுத்தமாட்டோம்

இந்தியச் சட்டத்தின்கீழ் உங்களுக்குரிய உரிமைகள்

DPDP சட்டம், உங்கள் தனிப்பட்ட தரவின்மீது உங்களுக்குத் தெளிவான உரிமைகளை வழங்குகிறது. அவை பின்வருமாறு:

அணுகுவதற்கான உரிமை

உங்களைப் பற்றிய எந்தெந்த தனிப்பட்ட தரவுகளை நாங்கள் வைத்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துமாறு எங்களிடம் கேட்கலாம்; மேலும், அவற்றின் சுருக்கத்தையும் பெறலாம்.

சரிசெய்வதற்கான உரிமை

உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள துல்லியமற்ற அல்லது முழுமையற்ற எந்தவொரு தரவையும் திருத்தும்படி அல்லது புதுப்பிக்கும்படி நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.

அழிப்பதற்கான உரிமை

உங்கள் தனிப்பட்ட தரவை நீக்குமாறு நீங்கள் எங்களிடம் கேட்கலாம். சட்டப்படி அதை நாங்கள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத பட்சத்தில், அதை நாங்கள் உடனடியாக நீக்கிவிடுவோம்.

ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை

நாங்கள் உங்கள் தரவைச் செயல்படுத்தும்படி நீங்கள் அளித்த ஒப்புதலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். இவ்வாறு ஒப்புதலைத் திரும்பப் பெறுவது, இதற்கு முன் கடந்த காலத்தில் செய்யப்பட்ட செயலாக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பாதிக்காது.

പരാതി പരിഹാരത്തിനുള്ള അവകാശം

உங்கள் தரவை நாங்கள் கையாளும் முறை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், எங்களிடம் புகார் தெரிவிக்கவும் அதற்கான பதிலைப் பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு.

வாரியத்திடம் புகார் அளிப்பதற்கான உரிமை

எங்கள் பதிலில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில், நீங்கள் இந்தியத் தரவுப் பாதுகாப்பு வாரியத்திடம்புகார் அளிக்கலாம்.

இந்த உரிமைகளில் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்த, எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நியாயமான காலத்திற்குள், எவ்விதக் கட்டணமும் இன்றி நாங்கள் பதிலளிப்போம்.

எவ்வளவு காலம் உங்கள் தரவு எங்களிடம் இருக்கும்

நீங்கள் கோரிய சேவையை வழங்கவும், பொருந்தக்கூடிய எந்தச் சட்டப்படியான கடமைகளுக்கும் இணங்கிச்செல்லவும் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் உங்கள் பதிவுத் தகவலை நாங்கள் வைத்திருக்கிறோம். நடைமுறையில், இதன் அர்த்தம் என்னவெனில்:

  • மின்புத்தகம் பதிவுசெய்தலுக்கான பதிவுகள் பதிவுசெய்த தேதியிலிருந்து 3 ஆண்டுகள் வரை தக்கவைக்கப்படுகின்றன.
  • தொடர்பு படிவத்தின் மூலம் அனுப்பப்படும் செய்திகள், தொடர்ந்து நடைபெறும் தொடர்பாடலுக்காக அதிக காலம் தேவைப்படாவிட்டால், அதிகபட்சம் 1 ஆண்டு வரை பாதுகாத்து வைக்கப்படும்
  • உங்கள் தரவு இனி எங்களுக்குத் தேவையில்லாதபோது, அதைப் பாதுகாப்பான முறையில் நீக்குகிறோம், அல்லது அதை அடையாளம்காணமுடியாததாக்கிவிடுகிறோம்.

நாங்கள் உங்கள் தரவை யாருடன் பகிர்கிறோம்

நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை வணிக நோக்கங்களுக்காக எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் விற்பனை செய்வதோ, வாடகைக்கு விடுவதோ, அல்லது பகிர்வதோ இல்லை. பின்வரும் வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் தரவு பகிரப்படலாம்:

  • உங்களுக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்புவதற்காக மட்டுமே, எங்கள் சார்பாக ஒரு தரவுச் செயலாக்கியாகச் (Data Processor) செயல்படும் நம்பகமான மின்னஞ்சல் விநியோக சேவை வழங்குநருடன் (Email delivery service provider) பகிரப்படலாம்.
  • இந்தியச் சட்டத்தின்படியோ, அதிகாரம் பெற்ற தகுந்த அதிகாரியின் உத்தரவின்படியோ அவ்வாறு செய்ய வேண்டிய சூழ்நிலைகளில் பகிரப்படலாம்

நாங்கள் பயன்படுத்தும் எந்த சேவை வழங்குநர்களும், எங்கள் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்கவும், அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒப்பந்த ரீதியாகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள்.

தரவு பாதுகாப்பு

DPDP சட்டத்தின்கீழ் எங்கள் கடமைகளுக்கு ஏற்ப, உங்கள் தனிப்பட்ட தரவை அனுமதியின்றி அணுகுதல், இழத்தல், அல்லது துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, நியாயமான மற்றும் பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட தரவு மீறல் (personal data breach) ஏதேனும் எதிர்பாராதவிதமாக நிகழும் பட்சத்தில், சட்டப்படி தேவைப்படுவதற்கேற்ப உங்களுக்கும் இந்தியத் தரவுப் பாதுகாப்பு வாரியத்திற்கும் (Data Protection Board of India) அதைக் குறித்துத் தெரிவிப்போம்.

சிறுவர்களின் தரவு

எங்கள் இணையதளமும் அதன் உள்ளடக்கங்களும் வயது வந்தவர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்படுள்ளன; இவை 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டவை அல்ல. மைனர்களிடமிருந்து நாங்கள் தெரிந்தே எந்தவொரு தனிப்பட்ட தரவையும் சேகரிப்பதில்லை. ஒரு மைனர் எங்களுக்குத் தரவை வழங்கியிருக்கிறார் என்று நீங்கள் கருதினால், தயவுசெய்து உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளவும்; நாங்கள் அந்தத் தரவை உடனடியாக நீக்கிவிடுவோம்.

இந்தக் கொள்கையில் மாற்றங்கள்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் ஏதேனும் முக்கிய மாற்றங்களைச் செய்தால், இந்தப் பக்கத்தின் மேலேயுள்ள "கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட" தேதியை மாற்றுவோம். இந்தப் பக்கத்தை நீங்கள் அவ்வப்போது மறுபரிசீலனை செய்யுமாறு ஊக்குவிக்கிறோம். மாற்றங்கள் வெளியிடப்பட்ட பிறகும் எங்கள் இணையதளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது, புதுப்பிக்கப்பட்ட கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.

புகாரை எவ்வாறு பதிவு செய்வது

நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைக் கையாண்ட விதம் குறித்து உங்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால், முதலில் எங்களை இந்த முகவரியில் தொடர்புகொள்ளவும்:privacy@living-word.org. அனைத்து தனியுரிமை தொடர்பான புகார்களையும் உடனுக்குடன் நேர்மையாகத் தீர்த்துவிடுவதே எங்கள் நோக்கம். எங்கள் தீர்வில் உங்களுக்குத் திருப்தியில்லை எனில், இந்தியத் தரவுப் பாதுகாப்பு வாரியத்தின் (Data Protection Board of India) புகார்ப் பதிவு இணையதளம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அங்கு உங்கள் புகாரைக் கொண்டுசெல்ல உங்களுக்கு உரிமை உண்டு.